சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை.... சாலையில் தேங்கிய மழைநீர்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் ஆளாகினர்.. 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை.... சாலையில் தேங்கிய மழைநீர்

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்த நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு சேலம் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது..

இந்த மழை காரணமாக சாலைகளில் ஓரங்களில் நீர் தேக்கங்கள் ஏற்பட்டுள்ளது . அதேபோல் திடீர் மழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் ஆளாகினர்.. 

மேலும் அடுத்த 2 மணி நேரங்களுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது..