கோடை வெப்பத்தை தணித்த பலத்த மழை...பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

கோடை வெப்பத்தை தணித்த பலத்த மழை...பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த பலத்த மழையால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு  நாட்களாக  திருமயம் சுற்றுவட்டார பகுதிகளான நற்சாந்துபட்டி, பனையப்பட்டி விராச்சிலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வந்ததால், அப்பகுதி மக்கள் கோடை வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனா். 

இதையும் படிக்க : வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!

இதே போன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இந்நிலையில், திடீரென சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா். 

இதனை தொடர்ந்து மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அதன் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சுறை காற்றுடன் பலத்த மழை பெய்ததால், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.