இங்க தான்.. "இலகு ரக ஹெலிகாப்டர்கள் அறிமுகம்".. அப்படினா..? இப்படி தான் இருக்குமா? நீங்களே பாருங்க!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து தளத்தில் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இங்க தான்.. "இலகு ரக ஹெலிகாப்டர்கள் அறிமுகம்".. அப்படினா..? இப்படி தான் இருக்குமா? நீங்களே பாருங்க!!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள்  ராமநாதபுரம் உச்சிபுளியில் அமைந்துள்ள INS பருந்து இந்திய கடற்படை விமான நிலையத்தில் முறைப்படி இணைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், விருந்தினராக கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா,  ஐஎன்எஸ் பருந்துவின் சிவில் பிரமுகர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் முன்னிலையில்  தண்ணீரைப் பீச்சியடித்து வணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்டன.  

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்  தயாரித்த இந்த  ஹெலிகாப்டர், கடற்படை கப்பல்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து இயக்கக்கூடியதாகும், மேலும் ஹெலிகாப்டர் ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழப்புகளை வெளியேற்றவும்,  பயன்படுத்தப்படுகிறது,  இந்த ஹெலிகாப்டர் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி  பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும்,  கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இரவும், பகலும் பயன்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.