"சென்னையில் வீராவேசம்; டெல்லியில் அடிமைத்தனம்" எம்.ஆர்.கே பாய்ச்சல்! 

"சென்னையில் வீராவேசம்; டெல்லியில் அடிமைத்தனம்" எம்.ஆர்.கே  பாய்ச்சல்! 

என் எல் சி விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி, “சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?” என எம் ஆர் கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி எதிர்ப்பு 

கடலூர் மாவட்டத்தில் என்எல் சி 3 ஆம் சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றது. இதனை கண்டித்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் என்எல் சி 1 மற்றும் 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இதனை கண்டித்து அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "என்.எல். சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" என கடுமையாக விமர் சித்திருந்தார். 

அமைச்சர் விமர்சனம்

இந்நிலையில் தொடர்ச் சியாக என்எல் சி விவகாரத்தில் மாநில அரசை தொடர்ச் சியாக விமர் சித்து வரும் அன்புமணி ராமதாஸை கண்டித்து  உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், "என்எல் சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோ சி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாட்டாளி மக்கள் கட் சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

என்.எல். சி. விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த உழவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதாக இருக்கட்டும், உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்கட்டும், அனைத்திலும் எதிர்க்கட் சியாக இருந்தபோது ஆணித்தரமாகக் குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். இப்போது ஆட் சிப் பொறுப்பேற்ற பிறகு, என்.எல். சி. நிர்வாகத்துடன், ஒன்றிய அமைச்சர்களுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுக்க வைத்ததும் கழக அரசுதான். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட  இழப்பீட்டை விட அதிகமாக இழப்பீடு வழங்கியது மட்டுமன்றி, ஏற்கனவே இழப்பீடு பெற்றவர்களுக்குக் கூட மேலும் கூடுதல் தொகை பெற்றுத் தந்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்" என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் போராட்டம் என்ற பெயரில் மக்களைத் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வட மாவட்டங்களில் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் தள்ளி விட முயற் சிப்பதாகவும் சாடியுள்ளார்.

அடிமையாக இருப்பது ஏன்?

ஒரிடத்தில், “மண்ணையும் மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்” எனவும், இன்னொரு இடத்தில், “நாங்கள் டெல்லி அளவில் மட்டுமே தே சிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை” என்று அன்புமணி நாடகமாடுவதாக விமர் சித்துள்ள அமைச்சர், சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்”  "என்.எல். சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்" என்று கூறும் அன்புமணி, என்எல் சி நிலக்கரிச் சுரங்கத்தை கைவிட முடியாது என மத்திய அமைச்சர் அறிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி தே சிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறாமல் இருப்பதற்கு மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை குறித்த அச்சம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அவர், அதனால்தான் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் “கைவிரித்தும்” அன்புமணி அது பற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடியாமல் அமைதியாகி விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:"என்.எல். சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" அன்புமணி சாடல்!