தேடுதல் பணியை தீவிரப்படுத்த அதிவேக ட்ரோன் கேமராக்கள்…  

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 13வது நாளாக ஆட்கொல்லி புலியைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தேடுதல் பணியை தீவிரப்படுத்த அதிவேக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி  மாவட்டம் கூடலூர் பகுதிகளுக்குட்பட்ட முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து 13வது நாளாக புலியை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் என 120க்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, புலி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க நவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று புதிதாக எஃப்.பி.வி எனும் நவீன கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை துல்லியமாக இந்த கேமராவில் ஒளிப்பதிவை காண முடியும் என்றும், அடர்ந்த புதர்கள் இருந்தாலும் புலி இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.