செப்டம்பர் 15ந் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கான ரூ. 1000/- உரிமை தொகை வழங்கப்படும்..! - உதயநிதி ஸ்டாலின்

"இந்த அரசு சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம்...என்ற வகையில் செயல்பட்டு வருகிறது"....

செப்டம்பர் 15ந் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கான ரூ. 1000/-  உரிமை தொகை வழங்கப்படும்..! - உதயநிதி ஸ்டாலின்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில்  ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1260 பேருக்கு அடுக்குமாடி வீடு தனி வீட்டுமனை பட்டா வழங்க நிகழ்ச்சி  நடந்தது.  நிலஅளவை மற்றும் ஆயத்துறை தீர்வை இயக்குனர் டி.ஜெ.வினய், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வளர்ந்து வரும் தலைவராக உதயநிதி இருக்கிறார் என்றும்,  வீட்டில் இருந்து கொண்டு விளம்பரத்திற்காகவும் அரசியல் செய்யவில்லை என்றும், அரசியல் பண்புகளோடு  உழைக்கும் குடும்பத்தில் இருந்து வந்து மக்களுக்காக தமிழர் மானம் காக்க உழைத்து கொண்டு இருக்கிறார் எனவும் பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கு கூட்டு பட்டாவை தனி பட்டாவாக வழங்குகிறோம். மக்கள் வசிக்கும் நிலங்கள் அரசு நிலமாக உள்ளது.  அவை ரயாத்துவாரி பட்டாவாக வழங்கப்படும்" என்றார் 

மேலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,  கடந்த அதிமுக ஆட்சியில் இங்குள்ளவர்ககளுக்கு பட்டா வழங்கப்பட்டதும், ஆனால் ஆவணம் பதிவு செய்யபடாமல் பட்டா வழங்கியதால் அதை பெற்றவர்கள் தங்களது நிலங்களை விற்கவோ வங்கியில் கடன்பெற முடியாமலும் இருந்தனர் எனக் கூறினார்.
மேலும், திமுகவின்  கடந்த 2 ஆண்டுகள் ஆட்சியில் ஆலந்தூர் பகுதியில் பல கோடியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார். இந்த விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1260 பேருக்கு மனை பட்டா, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை போன்றவற்றை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,  சேப்பாக்கத்தில் நிறைய வீடுகள் கட்ட வேண்டி உள்ளது எனவும்,  பட்டா கேட்டு விண்ணப்பம் தந்தால் உடனடியாக பட்டா வழங்கும்படி கள ஆய்வில் முதல்வர் கூறி இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் அவர், "வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாகும். அதற்கு பட்டா அவசியம்.  வருவாய் துறை மூலம் 35க்கும் மேற்பட்ட சேவைகள் அறிமுகப்படுத்தி உள்ளது. அதேபோல் ஜாதி சான்று வருவாய் சான்றிதழ் உடனடியாக வழங்கவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது", என்றும் குறிப்பிட்டார். 

அதோடு, பெண்களுக்கான பல சிறப்பான திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார்  என்றும், ரூ. 300 கோடியில் பேருந்து பயணங்களை மகளிர் பயன்படுத்தி உள்ளதாகவம், இதன் மூலம் மாதம் ரூ.1000 சேமிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.  

இதையும் படிக்க     }  'மணல் எடுப்பது தொடர்பாக வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்..!' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அதே போல் செப்டம்பர் 15ந் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிரூக்கான ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் எனவும், இந்த அரசு சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது என கூறினார். விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.  பாரதி, செல்வம் எம்.பி., இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க     } "அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!" - டி.ஆர்.பாலு