ஆட்சியர்களின் தலையீடு இருந்தால் காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்? - ஜெயக்குமார் கேள்வி

ஆட்சியர்களின் தலையீடு இருந்தால், காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியர்களின் தலையீடு இருந்தால் காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்? - ஜெயக்குமார் கேள்வி

அதிமுக புரட்சி தலைவி அம்மா பேரவை உறுப்பினர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் 2வது  நாளாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக நாடகம் நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாகியதாலேயே பல இடங்களில் கொலை, கொள்ளை அரங்கேறி வருவதாக கூறிய அவர், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை மறைக்க முடியாது என்றும்,   காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட வேண்டும்  எனவும் கூறினார்.