நிலக்கரி சுரங்கம்.. தமிழ்நாடு அரசு கவனத்துக்கு வராமல் போனது எப்படி? அதிமுக எம்.எல்.ஏ

நிலக்கரி சுரங்கம்.. தமிழ்நாடு அரசு கவனத்துக்கு வராமல் போனது எப்படி?  அதிமுக எம்.எல்.ஏ

நிலக்கரி சுரங்கம் அமைப்பது தமிழ்நாடு அரசு கவனத்துக்கு வராமல் போனது எப்படிஎன்  அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ்  கேள்வி எழுப்பி உள்ளார்.
  
நிலக்கரி சுரங்கம் அமைப்பது மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக இன்று சட்டப்  பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவரப்பட உள்ளது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பும் போது "நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்ட இந்த நடைமுறையானது ஓராண்டுகளாக நடைமுறையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நடைமுறைகள் எப்படி தமிழ்நாடு அரசுக்கு கவனத்துக்கு வராமல் போனது என்பது வியப்பாக இருக்கிறது". என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்கு அரியாலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தஞ்சை மாவட்டம் குறிச்சிக்கோட்டை, பரவகோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

புதிய நிலக்கரி சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதனை ஒட்டி இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.