"சூறாவளி காற்று".. தமிழகம் உட்பட 2 பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

"சூறாவளி காற்று".. தமிழகம் உட்பட 2 பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!!  மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.  

ஆனால் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு  அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், இது அடுத்த 12  மணி நேரத்தில் புயலாக மாறி மியான்மர் கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதனால் அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.