முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் - மு.க. ஸ்டாலின் உருக்கம்

இந்தியாவின் முதல் குடிமகன், தமிழ் அன்னையின் தலைமகனின் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி  முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் தெரிவித்தார்..

முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் - மு.க. ஸ்டாலின் உருக்கம்

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  விழாவிற்கு  வருகை தந்த குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து  கொண்டவர் ராம்நாத் கோவிந்த் என்றும் புகழாரம் சூட்டினார். 

மகளிருக்கு வாக்குரிமை உள்ளாட்சியில் பெண்களுக்கு வாய்ப்பு உள்பட நாட்டிற்கே பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினாார்.மேலும்  பெண்களுக்கு  சொத்துரிமை   உள்ளிட்ட பலவேறு  வரலாற்று  சிறப்பு  வாய்ந்த சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு  உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். 

மேலும் சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக முதலமைச்சராக எதிர்ககட்சி தலைவராக  என அனைத்திலும் முத்திரை பதித்தவர்  கலைஞர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவர், தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.  இந்தியாவின் முதல் குடிமகன், தமிழ் அன்னையின் தலைமகனின் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி தமிழ்நாட்டின் முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என்று ஸ்டாலின் உருக்கமுடன் தெரிவித்தார்..