” பாஜகவின் மெயின் டீம் நான்தான்; எனக்கு பிறகுதான் பாஜக ’B’ டீம் “ - சீமான் கிண்டல்.

” பாஜகவின் மெயின் டீம் நான்தான்;  எனக்கு பிறகுதான் பாஜக ’B’ டீம் “ -  சீமான் கிண்டல்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு  சுடுகாடக மாறிவிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார். 

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம்  சீமான் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைகுட்டம் அணையை சீமான் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் :-

” சிவகாசி அருகே ஒரு லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் , 4 ஆயிரம் ஏக்கர் நீர் பாசன வசதி பெறும் வகையிலும் விளங்கிவரும் ஆணைக்குட்டம் நீர்த்தேக்க அணை கட்டியதற்கான அடிப்படையே தவறாக உள்ளது. அணையை கட்டியவர்களும், திறந்தவர்களும் அணையின் குறைகள் பற்றி தெரியாமல் உள்ளனர். இவ்வளவு நாட்களில் மதகை  மாற்றி சீரமைத்திருக்கலாம். 5 கோடி ரூபாயில் கட்டிய அணைக்கு, நான்கரை கோடி ரூபாயில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.அணை முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்றால் அணையை  பராமரிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும்”, என்று கூறினார். 

மேலும், ” எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வருகை தரும் ஒன்றிய அமைச்சர்கள் வாடகை வீடு எடுத்து கூட தங்குவார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வர கூடாது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை மறந்துவிட வேண்டும், நாடு நாடாக இருக்காது சுடுகாடாக மாறிவிடும். மோடியால் ஏற்பட்ட சமூக சீரழிவு, பொருளாதார பின்னடைவு, தொழில் சிதைவு இவற்றை யார் சரி செய்வது ? என கேள்வி எழுப்பினார்.


” இதுவரை நாட்டை ஆண்டதில் இதுபோன்ற மோசமான நிர்வாகம் யாரும் செய்ததில்லை என்றார். அதனை தொடர்ந்துஇந்தியாவில் 2 ஆண்டு ஆட்சி செய்த விபி சிங் ஆட்சியை தவிர வேறு யாரும் சிறப்பாக ஆட்சி நடத்தவில்லை. பாஜக வாக்காளர்களை தவிர வேறு யாரும் உயிரோடு இருக்கக் கூடாது என நினைத்தால் இது என்ன ஜனநாயக நாடு? இந்திய அரசியலில் ஏற்கனவே உருவான 3 வது அணியை (ராகுல் காந்தியை ) பிரதமர் வேட்பாளராக அறிவித்து அந்த அணியை களைத்து விட்டவர் முக.ஸ்டாலின்.


தமிழகத்தின் ஆட்சி மிக கேவலமாக கொடுமையான ஆட்சியாக உள்ளது. திமுகவில் உள்ள பெரிய. பெரிய தலைவர்களே ஆட்சியை குறை சொல்கிறார்கள்.  ஆட்சியாளர்களுக்கு மாற்று பொருளாதார சிந்தனை கிடையாது.சாராய வருமானத்தை விட்டால் வேறு வழி தெரியவில்லை. மோடியும், பாஜகவும் தமிழை பற்றி பேசினால் தமிழுக்கு  பேராபத்து ஏற்படும்.மோடி தமிழ் மொழிப்பற்று கொண்டவர் என்றால் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கலாமே!


கோழிக்கு இறை போடும் அரசியல்தான்  மோடி தமிழ் பேசும் அரசியல். என் பாட்டனின் செங்கோலை வைத்து நாடாளுமன்றத்தை திறந்த ஒன்றிய அரசு அவர்கள் பேசிய  இந்தியாவின் தொன்மை மொழியான தமிழை கல்வெட்டில் பதித்தால் பாராளுமன்ற கட்டிடம் இடிந்து விடுமா? தமிழை புகழ்ந்து பேசுபவர்கள் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏன் அறிவிக்கவில்லை, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஏன் தமிழை சேர்க்கவில்லை ? என கேள்வி எழுப்பினார்.   பாஜகவை நான்தான் வழிநடத்தி வருகிறேன்.
பாஜகவின் மெயின் டீம் நான்தான். எனக்கு பிறகுதான் பாஜக "பி" டீம் என்று விமர்சித்தார். 

இதையும் படிக்க    | இலவச வீட்டு மனை பட்டா ரத்து: வேலி அமைக்க வந்த அதிகாரி..! தாசில்தார் காலில் விழுந்து அழுத மூதாட்டி..!