பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தாலே கோபம் வருகிறது - அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தாலே கோபம் வருகிறது - அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் அவிநாசியில்  கார்பன் சமநிலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருவதாக கூறினார்.

இதையும் படிக்க : அரசியல் பேச மனம் நினைக்கிறது; அனுபவம் வேண்டாம் என மறுக்கிறது - ரஜினிகாந்த பேச்சு!

பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலை ஏற்படும் என்ற அமைச்சர் மெய்யநாதன், இதனை கருத்தில் கொண்டே 'மீண்டும் மஞ்சப்பை' என்ற அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.