சசிகலா தற்போது எடுத்து வரும் செயல்பாடுகளை வரவேற்கிறேன்... தொல். திருமாவளவன் பேட்டி...

சசிகலா தற்போது எடுத்து வரும் செயல்பாடுகளை வரவேற்கிறேன் ஆனால்  அதிமுக-வை மீட்க்க முடியுமா என்பது கேள்விக்குறி என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சசிகலா தற்போது எடுத்து வரும் செயல்பாடுகளை வரவேற்கிறேன்... தொல். திருமாவளவன் பேட்டி...

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அமைக்கப்மட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் தன்னை உறுப்பினராக நியமித்ததற்கு நன்றி தெரிவிக்க சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்நித்தார் அப்போது பேசிய அவர் : 

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நிச்சயம் சிறப்பாக செயல்படும் எனவும், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த மாநில அளவில் SC/ST பிரிவினற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை ஏற்று அரசு நடைமுறைபடுத்திருக்கிறது.

தலித் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை இந்த ஆணையம் தடுக்கும் என நம்புகிறோம் இது விசிக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார். மதுரை பல்கலைகழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள் போரட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். 

சசிகலா  ஜெயலலிதா நினைவிடம் சென்றது அவரின் தனிப்பட்ட விஷயம் அதற்கான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்த திருமாவளவன், அதிமுக-வை சசிகலாவால் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி என்றார். பாஜகவோடு இணக்கமாக செயல்பட்டு பின்னடைவை சந்நித்துவரும் அதிமுக தலைமையை சசிகலா கைபற்றுவார என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் ஆனாலும் இது காலம் தாழ்ந்த முடிவு என்றார்.

எச்.ராஜா-வின் பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது. பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூரா பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும் எனவும் அவர் கூறினார்.