காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன்.! பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.! 

காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன்.! பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.! 

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக புதிதாக நியமணம் செய்யப்பட்ட அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று பதவியேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 70 நாள் ஆகிறது ஒரு தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என தெரிவித்த அவர், எதற்காக நீட் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நீட் ஏழை மாணவர்களின் வரப்பிரசாதம் எனவும் கூறினார்.

மேலும், 96 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு  ஆர்டர் செய்திருக்கிறார்கள் என்றும், மத்திய அரசு  போதிய தடுப்பூசி  தரவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என்றும் அவர் தெரிவித்தார்,

அதோடு, டிஜிட்டல் மீடியா எத்திக்ஸ் கோர்ட் படி சோஷியல் மீடியா, ஓடிடி தளங்கள் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வருவோம் என கூறினேன், இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்று கூறிய அவர், 37 வயதில் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதை நான் சேவகமாக பார்கிறேன் என்றும் மூத்த தலைவர்களை அனுசரித்து செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் புதிய அணை கட்டக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றவர்,நான் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன் என்றும் கூறினார். மேலும், சமுதாய அடையாளமாக தான் கொங்கு நாடு என குறிப்பிட்டு இருந்தது. எங்கள் நிலைப்பாடு கொங்கு நாட்டை தனி நாடாக பிரிப்பது கிடையாது என்றும் தெரிவித்தார்.