திமுக-வை தொடர்ந்து எதிர்பேன்....சீமான் ஆவேசம்....!!

மேடையில் செருப்பு எடுத்து காட்டியதோடு இறங்கிட்டேன் என்று பெருமை படுங்கள், பழைய ஆளாக இருந்தால் வேறு மாறி ஆகியிருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக-வை தொடர்ந்து எதிர்பேன்....சீமான் ஆவேசம்....!!

மொழிப்போர் தியாகி கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், 

நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் பாஜக வந்திடும் என தெரிவிக்கின்றனர். பாஜக-வை தடுக்க என்ன செய்தார்கள். பாஜக B டீம் என்று கட்டமைக்கின்றனர். அதான் திராவிட பிராடு. அவர்கள் வேலையே இதான். காலம் காலமாக பொய் சொல்லி திரும்ப திரும்ப பேசி அதை உண்மை போல் ஆக்குவது தான் அவங்க வேலை. அங்கிருந்து வந்தவன் நான். அவங்க என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியாதா? என கூறினார். 

புதிய கல்வி கொள்கையை முதலில் எதிர்த்து விட்டு, தற்போது திமுக அதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துப்போம் என்று சொல்கிறார்கள். ஒரு நல்லதை சொல்லுங்க என்றால் பதில் பேசுவது இல்லை. இல்லம் தேடி கல்வி எல்லாம் பாஜக ஆர்.எஸ்.எஸ் கொள்கை தானே. மதவாதம் எதிரானவர்கள் என்கிறார்கள். அப்புறம் ஏன் இஸ்லாமிய கைதிகளை  விடுவிக்கவில்லை என்றும்

10 ஆண்டுகள் மேல் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய சட்டத்தை கொண்டு வந்த திமுக, இஸ்லாமியர்கள் என்பதாலேயே விடுதலை செய்ய முடியாது என்று சொல்வது எவ்வளவு பெரிய மதவாத போக்கு. எவ்வளவு பாசிசம் என சாடினார்.  

மேலும் திமுக-வை தான் அதிகமா எதிர்பேன். காரணம் துரோகிகள். கருணாநிதிக்கு எங்க அண்ணனை பிடிக்காது, அதனால் எனக்கு அவரை பிடிக்காது. என் இனத்தை கொன்றது காங்கிரஸ், கூட நின்றது திமுக. வேடிக்கை பார்த்தது அதிமுக பாஜக. இவர்கள் எல்லாம் எதிரிகள் தான். சம தராசில் வைத்து தான் சண்டை போடுவேன். காங்கிரஸ் பன்ன அயோக்கியத்தனத்தில் வந்த குழந்தை தான் மோடி. இப்போ மோடி வந்துவிட்டார் வந்துவிட்டார் என்றால். இவ்வளவு பெரும்பான்மை வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் என கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் என்று கருத்து வருகிறது பற்றிய கேள்விக்கு, நான் தேர்வு செய்ய வேண்டாம் என கூறினால் விட்டு விடுவார்களா?. அவர்கள் திட்டம் படி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக தேர்வு செய்வார்கள். அதான் திட்டம். நான் வரவேற்கிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக இருக்கிறது. ம.சுப்பிரமணியன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியும், அரும்பாடு படுபவர் என தெரிவித்தார்.