புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம்...ஐஐடி நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்...

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான பணி தொடர்பான அறிக்கையை  ஐஐடி நிபுணர்கள் தாக்கல் செய்தனர்.

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம்...ஐஐடி நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்...

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான  முழு அறிக்கையை,  ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்தது.  சுமார் 2 ஆயிரம் வீடுகளுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த வீடுகளில் கட்டுமான பணி தரமற்று இருப்பதாகவும், கையால் தட்டினால் கூட சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக,  2 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கட்டுமான பணியின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி தலைமை செயல் பொறியாளர்  பத்மநாபன் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து,  இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

இந்தநிலையில், கட்டிடத்தின் தரம், கட்டிட பணிகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இறுதி அறிக்கையை நிபுணர் குழுவினர் இன்று நகர்புற மேம்பாட்டு வாரியத்தலைவரிடம் தாக்கல் செய்தனர்.