ஐஐடி மாணவர்களும் மனிதர்கள்தான்...!  அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

 ஐஐடி மாணவர்களும் மனிதர்கள்தான்...!  அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

மத்திய அரசு நிறுவனத்தில் படித்தாலும் ஐஐடி மாணவர்களும் மனிதர்கள்தான் என பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும்  19 ஆம் தேதி அவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் சென்னை பெருநகர காவல்துறையின் மகிழ்ச்சி திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி மகிழ்ச்சி திட்டம் முதலாம் ஆண்டு விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா. சுபிரமணியன் பேசுகையில், சென்னையில் காவல் துறையில் மகிழ்ச்சி திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் 2006ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக தான் பணியாற்றும்போது மாநகராட்சியில் பணியாற்றிய 1586பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் மது போதை பழக்கத்தில் இருந்து விடுபட மையம் ஏற்படுத்தப்பட்டதால் அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாநகராட்சி பணியாளர்கள் மது பழக்கத்தில் இருந்து விடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், சென்னை ஐஐடியில் சில மாதங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடப்பட வரும் 19 ஆம் தேதி ஐஐடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், அது மத்திய கல்வி நிறுவனமாக இருப்பதால் மாநிலத்தில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாமா? என்று சிலர் பார்ப்பார்கள் ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் எனக் கூறிய அவர்  மனிதர்களை காப்பது அரசின் கடமை எனக்கூறி  மாநில அரசு சார்பில் ஐஐடி மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார்.