ஐ.டி. நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் - பிடிஆர்

ஐ.டி. நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் - பிடிஆர்

ஐ.டி. நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  

மதுரை நாகமலை அருகே தமிழக அரசுக்கு சொந்தமான ஐடி பூங்கா அமைந்துள்ளது. அங்கு 500 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள தனியார் ஐடி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அடிக்கல் நாட்டினார். 

இதையும் படிக்க : பாஜக கோரிக்கை...மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!

பின்னர் பேசிய நிதியமைச்சர், மதுரையில் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்தவர், அதனை சரி செய்யவே இது போன்ற ஐடி நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்பதாக கூறினார். தொடர்ந்து பேசியவர், ஐடி நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், இது போன்ற பல ஐடி நிறுவனங்கள் நம் மதுரையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.