சென்னையில் புரவாங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு

சென்னையில் உள்ள புரவாங்கார ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் உள்ள புரவாங்கார பிரவிடன்ட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

கர்நாடகாவை தலைமையிடமாக கொண்ட புரவங்காரா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள புரவாங்காரா பிராவிடன்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பல்வேறு மாநிலங்களில் கிளைகளை தொடங்கி நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1300 கோடி ரூபாய் அளவு வரி ஏய்ப்பும், 20 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணமும், மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக புரவங்காரா நிறுவனம் செயல்படும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை எம். ஆர்.சி நகர் பீச் இரண்டாவது தெருவில் உள்ள அலுவலகத்தில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு சென்னை மும்பை, கர்நாடகா, புனே, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகளை திறந்து அடுக்குமாடி குடியிருப்பு நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இதையும்  படிக்க   | சென்னை கடற்கரை - தாம்பரம்: அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து!