இது முழுமையாக வெற்றி பெற்றால்?.. உயிரிழப்பே இல்லாமல் போகிடும் - அமைச்சர் மா.சு

மக்களை தேடி மருத்துவம் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றால், தொற்று நோய்களால் ஏற்படும் இறப்புகள் இல்லாமல் போகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது முழுமையாக வெற்றி பெற்றால்?.. உயிரிழப்பே இல்லாமல் போகிடும் - அமைச்சர் மா.சு

விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் உதவி செய்து பலரது உயிரை காப்பாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், அலர்ட் தன்னார்வ அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விருதுகள் வழங்கினார்.

இந்த விழாவில் மன்னார்குடி செவிலியர் வனஜா மற்றும் சென்னை பெண் காவலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.   பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 56 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும், அந்த திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு மருத்துவம் கொடுக்க இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.