கொரோனா மைனஸாக வேண்டும் என்று நினைத்தால் அது பிளஸ்ஸாகி வந்துள்ளது.! தமிழிசை வேதனை.! 

கொரோனா மைனஸாக வேண்டும் என்று நினைத்தால் அது பிளஸ்ஸாகி வந்துள்ளது.! தமிழிசை வேதனை.! 

கொரோனா மைனஸ் ஆக வேண்டும் என நினைக்கும் நிலையில் டெல்டா பிளஸ் வந்துள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

கவிஞர் கண்ணதாசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதில்  பெருமை அடைகிறேன் என்றும், தமிழ் ஆர்வலர் என்ற முறையில் மரியாதை செய்ய வந்துள்ளேன் என்றும் தெரிவித்த அவர், புதுவை பாரதியாரும் பாரதிதாசனும் உலா வந்த மண் ,அங்கு  துணை நிலை ஆளுநராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதே சமயத்தில் கண்ணதாசன் வளம் வந்த தமிழ் மண்ணில் வந்து அவருக்கு  மரியாதை செலுத்தியது மேலும்  பெருமையாக உள்ளது  என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புதுவையில் நல்லாட்சி அமைவதற்காக வரும் 27 ஆம் தேதி 5 அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்றும், அவர்களின் பெயர் பட்டியலை ஏற்கனவே குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி உள்ளேன் என்றும் தெரிவித்தார். அதோடு புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கப்படாததால் கொரோனா கட்டுப்படுத்துவதில் சுணக்கம் இல்லை என்ற அவர், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் உயர்நீதிமன்றமே எங்களை பாராட்டி உள்ளது என்றும் தெரிவித்தார்.  

மேலும், கொரோனா மைனஸ் ஆக வேண்டும் என நினைக்கும் நிலையில் டெல்டா பிளஸ் வந்துள்ளது இதற்கு
தடுப்பூசி தான் தீர்வு என்ற அவர் எந்த அலை வந்தாலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.