காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை..! ”காவலர்களுக்கு தெரியுமா?.. ”

காஞ்சிபுரத்தில்  சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை..!  ”காவலர்களுக்கு தெரியுமா?.. ”

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் திறப்பதற்கு முன் ஜோராக நடக்கும் மது விற்பனை ஆரம்பாக்கம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன.

சமீபத்தில் தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடிய நிலையில் இந்த இரண்டு கடைகளில் ஒரு கடை மட்டும் மூடப்பட்டது மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடையை மூடாமல் ஏரிப்பகுதியில் உள்ள கடையை மூடிவிட்டதாக அப்பகுதி மக்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

தற்போது ஏற்கனவே ஏரிப்பகுதியில் இருந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு அருகே தினசரி காலை 6 மணி முதல் 12 மணி வரை கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மதுபானத்தோடு பாரில் விற்பனை செய்ய கூடிய தண்ணீர், கிளாஸ், சைடிஷ் என அனைத்தும் கூடுதல் விலைக்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த ஆரம்பாக்கம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவது காவலர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் தெரியாமலும் நடந்துக் கொள்கின்றனரா?  என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

எனவே கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க    | ஒசூர் தொழில்நுட்ப பூங்கா; நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றம்!