சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள்..! 3 பேர் கைது..!

மதுரை பாலமேடு அருகே சட்ட விரோதமாக கடத்தி,விற்பனை செய்யப்பட்ட 46 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள்..! 3 பேர் கைது..!

மதுரை பாலமேடு அருகே சட்ட விரோதமாக கடத்தி,விற்பனை செய்யப்பட்ட  46 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.  

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி- பெரியகுளம் பிரிவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.    

அப்போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பரளியை சேர்ந்த நூர்முகமது (65), தனுஷ் (18) ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துவந்தனர். தொடர்ந்து பாரைபட்டியில் ராஜேந்திரன் மளிகை கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து லட்சம் மதிப்புள்ள 40 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாலமேடு போலீசார், மேலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் எந்தெந்த பகுதிகளுக்கு கடத்தி விநியோகம் செய்யபடுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்துவோர், விற்பனை செய்வோர், பதுக்குவோர் மீது சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் பதுக்கி வைக்கும் குடோன்கள், விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கபடும் என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.