கன்னியாகுமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு ...!

கன்னியாகுமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு ...!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால்  பூக்களின் உற்பத்தி பாதித்துள்ளது. மேலும் அட்சய திருதி, ரமலான் பண்டிகை உள்ளிட்ட சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரிப்பதால் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பிற நாட்களில் 500 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ ஒரே நாளில் 2000-க்கு விற்பனை மேலும் மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு திண்டுக்கல், பெங்களூர்,ஓசூர்,ராயக்கோட்டை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. அதே போன்று உள்ளூர்களான தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் ஆகிய பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்கள் வெப்பத்தில் கருகி பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தைக்கு வரக்கூடிய பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் ரமலான் பண்டிகை மற்றும் அட்சய திருதியை, சுப முகூர்த்த தினங்கள் ஆகியவை தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் தற்போது பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க   } ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு - ஆடு விற்பனை அமோகம்..! 7 கோடிக்கு விற்பனை....!

குறிப்பாக 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ பிச்சி பூ ஒரே நாளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து இன்று 2000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அதேபோன்று மல்லி பூ 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. சம்பங்கி 110 ரூபாய்க்கு, மஞ்சள் கிரேந்தி இன்று 120 ரூபாயாகவும் 140 ரூபாய்க்கு விற்ற பட்டன் ரோஸ் 150 ரூபாயாகவும், தாமரை பூ 10 எண்ணம் ரூ 100க்கும் அரளி ரூபாய் 70க்கும், கோழி பூ இன்று 300 ரூபாயாகவும் அனைத்து பூக்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் பூக்களின் தேவை அதிகரித்ததால் தோவாளை மலர் சந்தைக்கு வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

இதையும் படிக்க   } உலக அமைதி வேண்டியும், நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும்....இஸ்லாமியர்கள் தொழுகை