11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!!

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும்  கரூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் வரும் 20ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.