தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளது....!!!

 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளது....!!!

தமிழ்நாட்டில் போதிய அளவில் கொரோனா மருந்துகள் மற்றும் படுக்கைகள் கையிருப்பில் உள்ளதாக சுகாததாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத் துறை மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.  அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து எடுத்துரைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் போதிய அளவில் மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மாதிரிகளில், வேறு தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க:  மாற்றப்பட்ட பிரதமர் மோடியின் சென்னை பயண திட்டம்....!!