கைதிகளின் குடும்பம் பயன்பெறும் வகையில், ' சிறை சந்தை ' நடைமுறை அறிமுகம்...!

கைதிகளின் குடும்பம் பயன்பெறும் வகையில்,  ' சிறை சந்தை ' நடைமுறை அறிமுகம்...!

சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப் படுத்துவதற்காக சிறை சந்தை தொடங்கப்பட்டது. இதனை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, சிறைக் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம், மற்றும் சிறைத்துறை சார்ந்த சிறகிதழ் ஒன்றையும் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்:- 

" மத்திய சிறைச்சாலையில் தயாரிக்கப்படுகிற பல்வேறு பொருட்களை விநியோகிக்கவும், அறிமுகப்படுத்தவும் நிகழ்ச்சி இன்று துவங்கி வைத்தேன், சிறைத் துறையில் செய்யப்படும் இந்த பொருட்கள் மூலமாக சிறையில் இருக்கக்கூடிய  கைதிகளின்  குடும்பத்திற்கு உதவும் வகையில் இதை செய்து வருகிறோம்.  முதல் முறையாக பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த திட்டத்தை சிறைத்துறை சார்பாக அறிமுகப்படுத்தி உள்ளோம், இதில் தரமான சிறந்த பொருட்கள் அனைவருக்கும்  தர ஏற்பாடு செய்துள்ளோம்", என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசுகையில், ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு வரவேற்பு இருக்கிறது  இது தொடர்பாக ஆலோசனை செய்து மக்களுக்கு ஆன்லைன் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைவாசிகளின் மூலமாக தான் இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.. குறிப்பாக  வேலூரிலே தரமான காலணிகள் தயாரிப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவைகளை உற்பத்தி செய்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறினார். 

மேலும், " அண்ணா பிறந்த நாளுக்கு 700 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 460 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற சிறை கைதிகள் குறித்த ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சில கோப்புகள் திருப்பி அனுப்ப பட்டுள்ளது அவை மறு பரிசீலனைக்கும் அனுப்பப்படுகிறது. சிறுதுறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்களுக்கு பணி உயர்வு குறித்து ஆலோசனை செய்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு பணிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றும், ஆன்லைன் ரம்மி தொடர்பான அதிகார அமைப்பு குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் அமைக்கப்படும்",  எனவும் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இஸ்லாமியர்களின் வழக்குகள் பொறுத்தவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் கொடுக்கப்பட்ட தண்டனை பொறுத்து அவர்கள் விடுக்கப்படுவார்களா என்பதை குறித்து ஆலோசனை செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ", என தெரிவித்தார். 

மேலும் 14 லட்ச ரூபாய் செலவில் சிறைச்சந்தையும், உடற்பயிற்சி கூடமும் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க     | மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசு காலம் தாழ்த்தினால் மாநில அரசே கட்டும்...மா.சுப்பிரமணியன் அதிரடி!