ஓபிஎஸ் விவகாரத்தில் ஒருதலைபட்சம் காட்டிய சபாநாயகர் - ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

ஓபிஎஸ் விவகாரத்தில் ஒருதலைபட்சம் காட்டிய சபாநாயகர் - ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தை பேச அழைத்து அவைத்தலைவர் அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அதிமுகவின் தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அதிமுக சார்பில் அவைத்தலைவர் ஓபிஎஸ்-ஐ பேச அழைத்து ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

இதையும் படிக்க : சூதாட்ட தடை சட்ட மசோதாவின் 8 பக்க அறிக்கை...ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்?

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கு எதன் அடிப்படையில் அவைத்தலைவர் பேச அனுமதித்தார் என்றும், ஓபிஎஸ் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பற்றிய கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலாவுக்கு எவ்வித தார்மீக அடிப்படை உரிமையும் இல்லை என்றும், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் போது அவர்கள் திமுக கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.