கூட்டுறவு மானிய கோரிக்கை மீது திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்!!

சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் எதுவும் போட முடியாது என குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா என  கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கூட்டுறவு மானிய கோரிக்கை மீது திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்!!

சட்டப்பேரவையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்நாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.  அப்போது குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உறுப்பினர் வேறு கேள்விக்கு சென்றால் விவாதம் தொடராது என்றார்.

இதனால் ஆவேசமடைந்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது ஜனநாயக நாடு - விவாதிக்கவே சட்டப்பேரவை கூடியுள்ளதாக தெரிவித்தார். விவாத்தின் போது, கண்டிஷன் எதுவும் போடமுடியாது என்றும் இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே அவையில்  பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்னார். தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு  வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிச்சாமி விமர்சித்தார்.