பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை சோதனை...! 4 வது நாளாக தொடர்கிறது..!

ஆம்பூரில் 4வது நாளாக பரிதா குழுமத்திற்கு சொந்தமான, 10 தோல் தொழிற்சாலை மற்றும் காலணிகள் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை சோதனை...! 4 வது நாளாக தொடர்கிறது..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 10 தோல் தொழிற்சாலை மற்றும் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு  4வது நாளாக வருமானவரித்துறை துணை ஆணையர் கிருஷ்ண பிரசாத் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 110 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் தொழிற்சாலை  ஏற்றுமதி மேலாளர்கள், தொழிற்சாலை காசாளர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரிடமும் 4வது நாளாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கான ஆவணங்கள் மற்றும் ஆண்டுதோறும் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் பணிபுரியும், சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களின் சம்பள பட்டியல் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை 4வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.