பிரபல துணிக்கடையான பச்சையப்பாஸ் சில்க்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உட்பட மூன்று நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல துணிக்கடையான பச்சையப்பாஸ் சில்க்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உட்பட மூன்று நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம், எஸ்.கே.பி நிதி நிறுவனம் மற்றும் செங்கல்வராயன் சில்க்ஸ் உள்ளிட்ட நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பச்சையப்பாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சுந்தர்கணேஷ் மற்றும் பச்சையப்பன் ஆகியோருக்கு சொந்தமான வீட்டிலும், எஸ்.கே.பி நிதி நிறுவனத்தின் உரிமையாளரான திமுக பிரமுகர் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், செங்கல்வராயன் சில்க்ஸ் உரிமையாளரான குல்ஷன் ஐயருக்கு சொந்தமான வீடு என தமிழகம் முழுவதும்  மொத்தம் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வரக்கூடிய பச்சையப்பாஸ் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் காலை 8 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கடையின் முதல்தளத்தில் இயங்கி வரக்கூடிய கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளிக்கடையின் மேலாளரை வருமான வரித்துறையினர் அழைத்து வந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் ஷட்டரை மூடி சட்டவிரோதமாக பட்டு சிலை விற்பனை செய்து அந்த வருமானத்தை மறைத்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையானது நாளை வரை நீடிக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.