பெண் பயணிகளின் அதிகரிப்பு... அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்...

ஓட்டுநர் பயிற்சிபள்ளிக்கு மத்திய அரசின் புதிய நடைமுறை... செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது... அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.

பெண் பயணிகளின் அதிகரிப்பு... அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்...
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
தனது சொந்த தொகுதியான முதுகுளத்திற்கு வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.  அப்போது செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது:
 
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கான மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகள் குறித்த கேள்விக்கு
 
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளின் படி நகர்ப் பகுதிக்குள் 2 ஏக்கர் அளவு நிலம் வேண்டி உள்ளது இதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளது, எனவே இதுகுறித்து போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கொடுக்கப்படும் என்றார்.
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு,
 
கொரோனா காலகட்டத்தில் அரசு எதிர்பார்த்த பெண் பயணிகள் 40% மட்டுமே ஆனால் தற்போது 65 சதவீத பெண் பயணிகள் அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். 
 
பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறைக்கும் என்னும் இல்லை. கொரோனா காலங்களில் இயங்காத பேருந்துகள் கூட தற்போது தமிழகம் முழுவதும் இயங்குவதற்கு முயற்சிகள் செய்யப்படுகிறது.
 
அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற அறிவிப்பினால் அரசுக்கு இழப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, அரசு 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது இருந்தும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இதுகுறித்து மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.