மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை அதிகரிப்பு… தமிழக அரசு அதிரடி!

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும்  நிவாரண நிதி  அதிகரித்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை அதிகரிப்பு… தமிழக அரசு அதிரடி!

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும்  நிவாரண நிதி  அதிகரித்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண நிதி  5,000 இருந்து 6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அரசாணையில் தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் கூறியுள்ளார்.

இதனால் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு 108 கோடி நிவாரண தொகை தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிவாரண தொகையை மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.