அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு...மக்கள் அச்சப்பட தேவையில்லை..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.!

பெருநகரங்களில் டெல்டா மரபணு வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மரபணு வைரஸ்  பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு...மக்கள் அச்சப்பட தேவையில்லை..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

ஒமிக்ரான் தொற்று  அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைத்து கட்டுபாடுகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் நேற்று வரை உலக அளவில் 26-லட்சம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது என கூறிய அவர், பொதுமக்கள் அச்சம் மற்றும் பதற்றம் மடைய தேவையில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் ஸ்கீரினிங் சென்டர்களில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.  

மேலும் தமிழகத்தில் தற்போது வரை  1,16,587 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் 1730.97 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், 217 பிராண வாயுவை உருவாக்கும் கருவி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 
தொடர்ந்து பேசிய அவர், பெரியவர்களை விட சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் 3 நாட்களுக்குள் 12 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறிய அவர், தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுபாடுகள் விதிக்கப்படுமா ?என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.