406 தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!!

நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 406 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா்.

406 தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!!

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகை மற்றும் பயிர் கடன்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்த தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனை கண்டித்து 406 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேறறாவிட்டால் வருகின்ற 13 முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தொிவித்தார்.