சுதந்திர தின கொண்டாட்டம்; மீன் பிடிக்கத் தடை!

சுதந்திர தின கொண்டாட்டம்; மீன் பிடிக்கத் தடை!

சுதந்திரத் தினத்தன்று சென்னை புனித  ஜார்ஜ் கோட்டையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் நாள் 76 வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டதில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக இந்நிகழ்வு சென்னை  புனித  ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை ஒட்டிய பகுதிகளில் ஆகஸ்ட் 15 அன்று மீன் பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளதால் பாதுகாப்பு கருதி, அன்று காலை 4. 00 மணி முதல் 10.00 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசன்ட்நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :நாங்குநேரி கொடூரம்; நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணைக் குழு!