இந்தியாவே பெருமைப்படக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைகோ

இந்தியாவே பெருமைப்படக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைகோ

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட கண்காட்சியினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும் படிக்க | நான் எப்போதும் பெண்களின் உரிமைக்காக வாதாடுவேன் - பிடிஆர்

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரிஸ் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்,'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி, கடந்த பிப்., 28ம் தேதி துவங்கியது.
இதை,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.  ஸ்டாலின் வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கும் வகையில், பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.மிசா' காலத்தில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விளக்கும் வகையில் 'மாதிரி அரங்கு' அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கண்காட்சியினை அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சரின் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தினை பார்த்து வருகின்றனர். எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் கண்காட்சி ஆனது 12ஆம் தேதி உடன் நிறைவடைவதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவே பெருமைப்படக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின்

வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றிக் கொண்டு தனது 12 வயதிலிருந்து பல்வேறு தளங்களில் இன்னல்களை சந்தித்து படிப்படியாக களத்தில் வளர்ந்து இன்று இந்தியாவே பெருமைப்படக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.

அவரது சிறுவயதிலிருந்தே ஆற்றிய பணிகளை சித்தரிக்கப்பட்டு கண்காட்சியாக மாற்றியுள்ளதற்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்