இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச சர்ஃபிங் போட்டி...!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச சர்ஃபிங் போட்டி...!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச அலைச்சருக்கு போட்டி ஆகஸ்ட் 14 ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அலைச்சருக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சருக்கு கூட்டைமப்பு இணைந்து உலக சர்ஃப் லீக் QS 3000 அலைச்சருக்கு போட்டியை நடத்துகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறோம் என தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருன் வாசு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சர்ஃபிங் (SURFING-அலைச்சருக்கு) அசோசியேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச சர்ஃப் ஓபன், உலக சர்ப் லீக் QS 3000 அலை சருக்கு போட்டியை நடத்துகின்றது. இப்போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருன் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் பேசிய அருண் வாசு, "தமிழகத்தில் கோவளத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிதாக ஆரம்பித்த இந்த சர்ஃபிங் தற்போது உலக வரைபடத்தில் தமிழகத்தையும் இந்தியாவையும் இடம் பிடிக்க செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம்பிக்கைக்கு உரிய இளம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதின் மூலம் உலக சர்ஃபிங் போட்டிகளில் இந்தியா பெரும் சக்தியாக இருக்கும். இந்த QS 3000 நிகழ்வில் 13க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 100 சர்வதேச சர்ஃபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற உள்ளதால் ஆண்கள் பிரிவில் 10  வீரர்கள் வைல்ட் கார்டு முறையிலும், பெண்கள் பிரிவில் 5 வீரர்கள் வைல்ட் கார்டு முறையிலும் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்" என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சருக்கு  போட்டி ஆகஸ்ட் 14 தேதி முதல் 20 தேதி  வரை நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 2  கோடி 67 லட்சம் வழங்கப்படுகிறது. 100 சர்வசேத வீரர்கள் இதில் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  இது தமிழக அரசின் அடுத்த மைல்கல் ஆகும். மேலும் சர்வதேச போட்டிகள் நடத்துவது குறித்து கபடி, கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமும் பேசி வருகிறோம் விரைவில் அதுவும் நடைபெறும்" என தெரிவித்தார்.