”15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” - இராமதாசு!

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து 15-ஆம் ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான பேச்சுக்களை தொடங்குவதற்கு போக்குவரத்துத் துறை முன்வராதது தொழிலாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க : அக்டோபர் 27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...!

எனவே, 15-ஆம் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாகத் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதுவரை மாதம் மூன்றாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.