உதயநிதி ரசிகர் மன்ற அலுவலகத்தில் சோதனை - நேரில் ஆஜரான செயலாளர் !!!!!

உதயநிதி ரசிகர் மன்ற அலுவலகத்தில் சோதனை - நேரில் ஆஜரான செயலாளர்  !!!!!

அறக்கட்டளை மற்றும் ரசிகர் மன்றம் ஆவணங்கள் 

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வரும் பாபு அதே அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் பாபு அலுவலகத்திற்கு சென்று அறக்கட்டளை மற்றும் ரசிகர் மன்றம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 100 ரசிகர் மன்றம்! அரசியலில் சுறுசுறுப்பாகும் உதயநிதி!

நேற்று இரவு 11 மணி வரை இந்த சோதனை நடைபெற்றுள்ளது.இதனை அடுத்து சோதனை நடைபெறும் போது பாபு அலுவலகத்தில் இல்லை என்பதால்  இன்று நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.இதனை தொடர்ந்து இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்தபின்  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினுடைய செயலாளர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Udhay on Twitter: "#ChepaukTriplicane தொகுதியிலுள்ள திருநங்கைகளுக்கு என்  பெயரிலான அறக்கட்டளை சார்பில் சுயதொழில் தொடங்க பயிற்சி தரப்பட்டு சான்றிதழ்  ...

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்

நேற்று என்னுடைய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். அதன் பிறகு இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்நிலையில் நேரடியாக வந்து அவர்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு நான் பதில் அளித்தேன் நாளையும் வரவேண்டும் என்று கூறினார்கள். நாளையும் சரியாக நேரத்தில் வந்து என்னுடைய விளக்கத்தை தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார். 
உதயநிதியின் அறக்கட்டளை மூலமாக நல உதவிகள் மட்டுமே செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்.. (படங்கள்) |  nakkheeran

மேலும் படிக்க | ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய நிர்வாகி மீண்டும் திமுகவில் சேர்ப்பு..!

இந்த விசாரணை எதற்காக என்று கேட்ட கேள்விக்கு  பதில் அளித்த அவர் அரசியல் காரணமாக இருக்கலாம் என்றும்   தெரிவித்தார். இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்யவில்லை மேலும் இது தொடர்பாக யாரையும் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.