வெள்ளத்தில் சிக்கிய பம்ப் ஆப்பரேட்டர் தேடும் பணி தீவிரம்...

காஞ்சிபுரத்தில் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பம்ப் ஆப்பரேட்டரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பம்ப் ஆப்பரேட்டர் தேடும் பணி தீவிரம்...

காஞ்சிபுரம் பாலாற்றில் குருவிமலை அருகில் சின்ன ஐயங்குளம் பகுதியை சேர்ந்த கருணாகரன்  காஞ்சிபுரம் நகராட்சி பம்ப் ஆப்பரேட்டர் பணி செய்து வருகிறார். காலையில் பாலாற்றில் சென்ற போது பாலாற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தற்போது அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொழுது அதனை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் மரத்தை பிடித்துக்கொண்டு தப்பித்துக் கொள்ளுங்கள் என இளைஞர்கள் அவருக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

பாலாற்றில் வெள்ளமானது நேற்றைய நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருந்தது இன்று காலை திடீரென்று வேலூரில் இருந்து திறக்கப்படும் நீரின் காரணமாகவே பாலாற்றில் வெள்ளம் இன்று காலை அதிகரித்தது அந்த சமயத்தில் சென்றதால் கருணாகரன் அதில் சிக்கி உள்ளார்.

தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப் துறையினர் தற்போது இணைந்து கருணாகரன் எங்கேயாவது மேடான பகுதியில் மரத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறாரா என படகு மூலம் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.