மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க தீவிரம்: 16வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை...  

மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை பிடிக்கும் பணி 16வது நாளாக நடைபெற்று வருகிறது.  

மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க தீவிரம்: 16வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை...   

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் T23 புலி, கடந்த ஆகஸ்ட் மாதம் , குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த கௌரி என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தாக்கி கொன்றது. இதை தொடர்ந்து 10ற்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்து கொன்ற புலி, கடந்த 1ஆம் தேதி மங்கல பஸ்வன் என்பவரையும் கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மேய்ச்சலுக்கு கூட செல்லாமல் அச்சத்தில் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் புலியை பிடிக்க கடந்த 10 நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் அச்சுறுத்தும் புலியை கண்டறியும் பணி 16வது நாளாக இன்றும் தொடர்கிறது. மசினகுடி பகுதியில் கால்நடைகள் மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து வனத்துக்குள் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

 அத்துடன் கேமராக்கள்,கும்கி யானைகள், சிப்பி பாறை வகையை சேர்ந்த நாய்கள் ஆகியவை இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக எந்த கேமராவிலும் புலி பதிவாகவில்லை. இதனால் புலியின் கால் தடங்களை பார்த்த பகுதிகளில் கூடுதல் கேமராக்களை பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.