மெகா தடுப்பூசி முகாம்- கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போட ஆர்வம்…

தமிழகம் முழுவதும்  4 வது  கட்டமாக நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே  3 கட்ட  மெகா முகாம் மூலம்  ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில்  நான்காவது கட்ட தடுப்பூசி முகாம், நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

சென்னை உட்பட பல்வேறு  மாட்டங்களில்  விட்டு விட்டு மழை பெய்ததால்  தடுப்பூசி செலுத்தும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மாலை 7 மணி வரை நடைபெற்ற முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதால் இன்று கோவிட் தடுப்பூசி பணிகள் எங்கும் நடைபெறாது என்றும் சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.