மணல் குவாரி அனுமதி வழங்க இடைக்கால தடை..!

மணல் குவாரி அனுமதி வழங்க இடைக்கால தடை..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கண்மாயில் மணல் குவாரிக்கு  அனுமதி வழங்குவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தென்காசியை  சேர்ந்த செல்லத்துரை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டதாவது:- 

"தென்காசி மாவட்டம், கடையநல்லூர் உள்ள கண்மாய்க்கு மழை நீரே முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இதனால் குறைந்த அளவு நீர் மட்டுமே இங்கு தேக்க முடிகிறது. இந்நிலையில் அதிகாரிகள் வணிக நோக்கத்திற்காக கண்மாய்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க முயற்சிக்கிறது.

இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்  கடையநல்லூர் கண்மாயில் எந்தவித மணல் குவாரி நடத்துவதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்."  என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்," கடையநல்லூர் கண்மாய் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க   | "ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே, லஞ்ச வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமை" உயர்நீதிமன்றம் அதிரடி!