10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு.... அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!!!

10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு.... அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!!!

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக உறுப் பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். 

இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய பாமக சட்டமன்ற தலைவர் கோ.க. மணி, “ஆணையத்திற்கு ஒரு மாதம் கால அவகாசம் நீட்டித்தால் போதாதா ? எதற்காக 6 மாதம் நீட்டிக்க வேண்டும் ? அண்மையில் நடைபெற்ற அரசு தேர்வுகளில் ஒரு வன்னியர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி ?” எனக் கேள்வியெழுப் பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “10.5 சதவிகித உள் ஒதுக்கீடு எந்த சூழலில் எந்த நேரத்தில் எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது ?  தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில் அவசர கோலத்தில் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது.  உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம்.  ஆணையம் கேட்டதாலேயே நீட்டிப்பு வழங்கியிருக்கிறோம்.” எனப் பதிலளித்துள்ளார். 

கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “சமூக நீதியை காப்பதில் அனைத்து கட்சிக்கும் பங்கு உண்டு.  வன்னியர் உள் ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் அவசரமாக வெளியிட்டாலும் அதனை திமுக ஆட்சியிலும் செயல்படுத்தினோம்.  மீண்டும் அந்த தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளோம்.  ஆணையம் 4 மாதத்திலே அறிக்கை தந்தால் உங்களை விட முதலமைச்சர் மகிழ்ச்சியடைவார்.” எனத் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து தவாக வேல்முருகன் பேசுகையில், “ ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுக பக்கமே இருக்கிறார்கள். ஆனால் இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்களை சுட்டுக் கொன்றது யார் ? ” எனக் கேள்வியெழுப் பினார்.

அதற்கு பதிலளித்த அதிமுக உறுப் பினர் கே. பி.முனுசாமி, “வன்னியர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதால் பொறுமையாக கையாள வேண்டும்.  முதலமைச்சரும், துரைமுருகனும் அழகாக விளக்கமளித்துள்ளனர்.  அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் வேல்முருகன் கூறிய கருத்துக்களை அவை குறிப் பிலிருந்து நீக்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்தார். 

கே. பி. முனுசாமியின் கோரிக்கைக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் அமைச்சர் பேசிய கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டன.  ஆனால் வேல்முருகன் யாரையும் எந்த கட்சியும் குறிப் பிட்டு பேசவில்லை.  நீக்க வேண்டிய அவசியமும் இல்லை.” எனக் கூறினார்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய விசிக உறுப் பினர் பாலாஜி, “இட ஒதுக்கீடு என்று சொன்னால் அதனை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி தான்.ஒட்டு மொத்தமாக 20 சதவிகிதம் இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா அல்லது 10.5 சதவிகிதம்  உள் ஒதுக்கீடு இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா என்பதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப் பினர் கே. பி.முனுசாமி, “இட ஒதுக்கீடு கொள்கையில் திராவிட இயக்கங்கள் அவரவர் ஆட்சியில் மிகப்பெரிய பங்கை அளித்திருக்கிறது.  ஜெயலலிதா தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார்.” எனக் கூறினார்.

விவாதத்தை தொடங்கிய பாமக உறுப் பினர் கோ.க. மணி, “10.5 இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார் என்ற நம் பிக்கையுடன் இருக்கிறோம்.  ஒரு மாதத்திற்குள் ஆணையத்தின் கால அவகாசத்தை முடியுங்கள் என்று தான் சொல்கிறோம்.” எனக் கூறி விவாதத்தை முடித்து கொண்டார்.

இதையும் படிக்க:  மகனுக்காக நயினார் நாகேந்திரனுடன் காரசாரமாக விவாதம் செய்த முதலமைச்சர்....!!!