திட்டமிட்டபடி 12ஆம் தேதி நீட் தேர்வு... தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

திட்டமிட்டபடி 12ஆம் தேதி நீட் தேர்வு... தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்படி அனைத்துக்கட்சியினரும் வலியுறுத்தி வரும் நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. 

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுள்ளது. இதனை மாணவர்கள் www.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.