கட்சித்தலைமை கையொப்பமிட்டால் மட்டுமே வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம்..! இல்லையெனில் சுயேச்சையாக போட்டி தான்..!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர், சுயேச்சையாக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சித்தலைமை கையொப்பமிட்டால் மட்டுமே வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம்..!  இல்லையெனில் சுயேச்சையாக போட்டி தான்..!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு, வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் நிலையில், போட்டியிடுவோரின் வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நேற்றுடன் முடிவடைந்தது.

நாளை வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. அதற்குள், வேட்பாளர்கள் படிவம் ஏ மற்றும் படிவம் பி-யை வழங்கினால் மட்டுமே அவர்களுக்கென சின்னம் ஒதுக்கப்படும்.

இந்த சூழலில், அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்னையால்,  கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் கையொப்பமிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.