பழமையான நகைகளை பழமை மாறாமல் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்திற்கு நல்லது.....பாலசுப்பிரமணியன்

பழமையான கோவில் நகைகளை பழமை மாறாமல் வைத்திருப்பதுதான் இந்த அரசுக்கு நல்லது என இந்து மகாசபை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பழமையான நகைகளை பழமை மாறாமல் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்திற்கு நல்லது.....பாலசுப்பிரமணியன்

இந்து மகாசபை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஆன்மீக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய கோவில் குலசை முத்தாரம்மன் கோவில். இங்கு நேர்த்திக் கடனை செலுத்த முடியவில்லை என பக்தர்கள் ஆதங்கத்தோடு இருக்கிறார்கள் இதற்கு தமிழக அரசு ஒரு முடிவை கொண்டு வர வேண்டும். என்றார்.

கேரளாவில் கொரொனா அதிகமாக இருக்கிறது. அங்கு ஆலயத்திற்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் சபரிமலையில் தினந்தோறும் 25 ஆயிரம் பேர் வழிபட்டு வருகிறார்கள் என்றார். ஆனால் அங்கு ஒரு கட்டுப்பாடு மட்டும்தான் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அல்லது கொரோனா பரிசோதனை  நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே தரிசனம் செய்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர்,

அதேபோல் தசரா திருவிழாவிற்கு தமிழக அரசு அறிவித்து இருந்தால் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள் கொரோனா பரிசோதனையும் செய்து கொண்டிருப்பார்கள் என கூறினார்.

எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தசரா திருவிழாவின், வெள்ளிக்கிழமை நடக்கக்கூடிய மஹிசாசூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களை அனுமதிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவலியுறுத்தினார். 

மேலும் கோவில் நகைகளை உருக்குவது திருப்திகரமாக இருக்காது இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பழமையான நகைகளை பழமை மாறாமல் வைத்திருப்பதுதான் இந்த அரசாங்கத்திற்கு நல்லது என்றும் நகைகளை உருக்க வேண்டிய வேலையை அரசாங்கம் செய்ய தேவை இல்லை என தெரிவித்தார்.