" ஆளுநரின் அதிகாரம் அவருக்கே தெரியாதது வேடிக்கையளிக்கிறது" - கனிமொழி எம்பி.

" ஆளுநரின் அதிகாரம் அவருக்கே தெரியாதது வேடிக்கையளிக்கிறது" -  கனிமொழி எம்பி.

ஆளுநரின் அதிகாரம் என்னவென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம் என்றும் திமுக எம்.பி. கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு எண்ணி செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக,.. 

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.  

                                                 - (குறள் 467 )  

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அதற்கு கலைஞர் எழுதிய உரையையும் சுட்டிக்காடியிருந்தார். 

கலைஞர் உரை : நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

இதையும் படிக்க     | "என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது" மு.க.ஸ்டாலின்!