சொன்ன திட்டங்கள் மட்டும் அல்ல;சொல்லாத பல திட்டங்களையும் தீட்டியுள்ளோம் - முதலமைச்சர் பதில்!

சொன்ன திட்டங்கள் மட்டும் அல்ல;சொல்லாத பல திட்டங்களையும் தீட்டியுள்ளோம் - முதலமைச்சர் பதில்!

இந்தியா முழுவதிற்குமான குரல் தான் தமிழ்நாட்டின் குரல் என்றும், சமூக நீதி, மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடு தான் தலைநகர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 
உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்து மிகவும் மன நிறைவோடு இருப்பதாகவும், இந்த 2 ஆண்டு கால ஆட்சியில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் முக்கால் பங்கு நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார். சொன்ன திட்டங்கள் மட்டும் அல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தீட்டி இருப்பதாக கூறிய முதலமைச்சர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கபட்ட அரசியல் நிர்வாகத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், இன்னும் சரி செய்ய வேண்டியது நிறைய உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : படம் வரைய பேனா, பென்சில்,.. வேணாமாம்.. ! நம்ம பசங்க அப்டேட் ஆகிட்டாங்க...! ட்ரோன் -லயே வர்ணஜாலம் பண்றாங்க....!

தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்லும் உள்துறை அமைச்சரின் பேச்சு சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட வன்மத்தையே வெளிபடுத்துகிறது என கூறிய முதலமைச்சர், மதச்சார்பின்மையை அரசியல் அமைப்பை நெறிமுறையாக கொண்ட நாட்டில், உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுகின்ற செயல் என தெரிவித்தார்.

நிதி அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியலில் ஈடுபடும் நபர்களுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை என்றும், மக்களுக்கான பணிகளை செய்யவே தமக்கு நேரம் சரியாக உள்ளதாகவும், உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.